Wednesday, July 1, 2009

நீளட்டும் (அல்லது) இன்னும் நிறைய....!

பாய்களின் ஆதிக்க சரசரப்புகளுக்குள்,

பதுங்கியிருந்தத் சத்தம்;

கைகளுக்கிடையில் தொங்கி,

தள்ளாடிக்கொண்டிருந்தது வாளி;

கால் கடுக்க நின்று வாசலில் நிறுத்திக்கொண்டிருந்தார்கள்.

நாசித்துளைக்கும் வாசம்;

அண்டாக்களின் மூடிகள் பெரும் வேகத்தோடு,

எடுத்து வைக்கப்பட்டுக்கொண்டிருந்த அந்த நேரத்தில்,

முடிந்துவிட்டிருந்தது முதல் பந்தி!

அதை நினைத்து பதை பதைத்து நின்றிருந்தேன்!

அவன் கரம் வழி கரண்டி ஏறி,

என் தட்டுக்குள் விழுந்து,

நான் முங்கி தின்ற,

அந்த சிக்கன் பிரியாணி;

இன்னும் கொஞ்சம்

நெறைய போட்டிருக்கலாமென....!




****************************************

மேலும் சில எதிர்வினைகளாற்றிய புரொபஷனல் கூரியர் & வெண்பா வாத்தி எங்கள் அண்ணன் ஜீவ்ஸ் :-)


குடி மகனே....

இருளின் ஆதிக்க சரசரப்புகளுக்குள்
அடங்கியிருந்தது காலம்,
காலுக்கடியில் நகரக்
காத்திருந்தது பூமி,
காலவரையற்று தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது
நாசித் துளைக்கும் காற்று,
நிசப்தங்கள் சப்தங்களாக
முடிச்சவிழ்ந்த நேரத்தில்,
முடிந்துவிட்டிருந்தது அனைத்தும்..
எனினும் நினைத்தேன்,
என் வாய்வழி உள்நுழைந்து
என்னை மதிமயக்கிக் குலைத்த
அந்த முதல் பிராந்தி மயக்கம்
நீண்டிருக்கலாமென...

***************************


செம அடி சார்


வெளிச்சத்தின் ஆதிக்கச் சரசரப்பு அடங்க
காத்திருந்தது காலம்
காலினடியில் மெதுவாக வேகத்தை
குறைத்துக் கொண்டது பூமி
காலவரையற்று வீசிக்கொண்டு இருக்கிறது
நாசித்துளைக்கும் கூவ நாற்றம்
முடிச்சவிழ்த்த நேரத்தில்
கொட்டிப்போனது எல்லா சில்லரையும்
அவன் பாக்கெட் வழி
என் கரம் புகுந்து பர்ஸ் எடுத்த
அந்த முதல் திருட்டு
அவன் கவனிப்பு வேறு பெண் மேல்
இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம்

***************************

கொஞ்சம் சீக்கிரமாய்!!


கருந்துகளின் ஆதிக்க சரசரப்புகளுக்குள்
கட்டவிழ்ந்துக் கிடக்கிறது காலம்
காலுக்கடியிலென்றின்றி எங்கெங்கும்
வியாபித்திருக்கிறது அண்டம்
காலவரையரை என்றின்றி எப்போதும்
வீசிக்கொண்டிருக்கிறது இதன் வீச்சம்
நிசப்தங்கள் சப்தங்களாய் மாறி
உயிரவிழ நினைத்த அந்நேரம்

எனினும் நினைத்தேன்
என்னை அப்படி உற்றுப் பார்த்து
உனக்கு ஸ்வைன் ஃப்ளூ இல்லை
என்று சொன்ன டாக்டர்
கொஞ்சம் சீக்கிரமே
சொல்லியிருக்கலாமென.......


பதிவுக்கு பிரியாணி போட்ட பதிவு!

No comments:

Post a Comment