Thursday, February 18, 2010

கோழி ஒன்று வேண்டும்

வையகம் தன்னில்
நான் வாழும் கதை கேட்க
புத்தகம் தன்னில் நான்
புகுந்த கதை சொல்ல....
பிளாகுகள் எழுதி நான்
பேதி கண்ட நிலை காண
கோழி ஒன்று வேண்டும்.....


கொக் கொக் கொக் என
கொக்கரித்திட
உன் கொக்கரிப்பினை
நான் ரசிப்பதை ரசிக்க...
கோழிகள் கோடி நான் மேய்த்ததை
சொல்லிச் சிரித்திட
கோழி ஒன்று வேண்டும்

வான் கோழி சுமக்கா சுவை தனை
நாட்டுக் கோழி சுமந்த கதை கேட்க
துள்ளித்திரிந்த நீ துவண்டு
போனதை பார்த்து
பறவைக் காய்ச்சலின்
துயர்தனை துடைத்து
உன்னை தோளிலிட்டு தாலாட்ட...
கோழியே நீ வேண்டும்!

மடியமர்த்தியுன்னை
மஞ்சள் பூசி சுட்டு
மசாலா அரைத்து
குழம்பு வைக்க
எலும்பும் வெந்து
சுவைதனை ஊட்ட
கோழி ஒன்று வேண்டும்

குவார்ட்டர்அடித்து நான்
ஃப்ளாட்டானதை சொல்ல
சைட் டிஷ் எனக்கொள்ள
சிக்கன் ஒன்று இன்றி
நான் தவிக்கும் கதை கேட்க....

65 கனவுக்கு நான்
ஆசைப்பட்டதை சொல்ல
ஊறுகாயைக் கூட நான்
இழந்த நிலை காண....

அண்டை டேபிள்காரனுக்கு
நான் அரசனாய் இருக்க
வாட்டர் பாக்கெட்டுக்குகூட நான்
வக்கில்லை என உணர்த்த......

இப்'பாரே' என்னை
இகழ்ந்த போது கூட
துணிந்து நின்று நான்
குவார்ட்டரை கடனாய்க் கேட்ட
என் வேதனை சொல்ல
கோழி ஒன்று வேண்டும்!!!!

பசித்தும் உண்ண மறுக்க
சிக்கன் பக்கோடா
எடுத்து ஊட்ட


டிஷென்று சொல்லி
என்னை தேற்ற
வறுவல் எனச் சொல்லி
நான் ஹேப்பியாய் குடித்திட.....
வாகாய் எனக்கு
கோழி ஒன்று வேண்டும்!!!!


ஒரிஜினல் வெர்ஷன் : ஏழு தோசை